லைப் ஸ்டைல்

வீட்டில் செல்வம் பெறுக தினமும் இதை செய்துவந்தாலே போதுமாம்! மஹாலக்ஷ்மி நிரந்தரமாக தங்கிவிடுவாராம்!

Summary:

How to increase money in home tips in tamil

நாம் குடியிருக்கும் வீட்டிற்கு தினமும் தேவர்களும், லட்சுமி தேவியும் வருவதாக கூறுவது ஐதீகம். பொதுவாகா நமது வீட்டிற்க்கு சொந்தக்காரர்கள் வந்தாலே வீட்டை சுத்தம் செய்து, வீட்டை அலங்கரிப்பது போன்று வீட்டை அழகாக வைத்திருப்போம். இதுவே நமக்கு வரன்கள், செல்வங்களை அள்ளித்தரும் தேவர்களும், தேவியும் வரும்போது நாம் வீட்டை எப்படி வைத்திருக்க வேண்டும்?

தினமும் கோலமிடும் வீட்டில் மஹாலக்ஷ்மி நிரந்தரமாக குடியிருப்பதாக வேத சாஸ்த்திரம் கூறுகிறது. சூரியன் உதிப்பதற்கு முன்பே வீட்டின் வாசலில் சாணம் தெளித்து கோலமிடுவதால் ஐஸ்வர்யம் பெருகும். மேலும், வீட்டிலிருந்து யாரேனும் வெளியே கிளம்புவதற்கு முன்பு கோலமிடுவது மிகவும் நல்லதாம்.

அதேபோல, கோலம் போடும்போது உட்கார்ந்துகொண்டு கோலமிடக்கூடாது. நன்கு குனிந்து கோலமிடவேண்டும். மேலும், கோலமிடும்போது அதில் தவறு வந்துவிட்டால் கால்களால் அதை நிறுத்தக்கூடாது. நன்கு குனிந்து கைகளால் மட்டுமே திருத்த வேண்டும்.

பச்சரிசி மாவில் கோலமிடும் போது, அது எறும்பு, ஈ போன்ற சிறிய உயிரினங்களுக்கு உணவாக அமையும். அதனால் கோலமிடுதலை,ஒரு சடங்காக,சம்பிரதாயமாக மட்டும் எண்ணாமல்,ஜீவகாருண்யதிற்கான வழியாகவும் பார்க்கலாம்.

வீட்டின் வெளிமுற்றம், அன்னம் செய்யும் சமையல்அறை, பசுவின் கொட்டகை, துளசிமாடம், பூஜை அறை ஆகியவை கோலமிடுவதற்கான ஏற்ற இடம். இதுபோன்று நமது வீட்டை சுத்தபத்தமாக பார்த்துவந்தால் நமக்கு வேண்டிய செல்வங்களை மஹாலக்ஷ்மி தருவார் என்பது நம்பிக்கை.


Advertisement