நீங்கள் வாங்கும் முட்டை நல்ல முட்டையா? கெட்ட முட்டையா?.. சோதிப்பது எப்படி?.!



How to Find Good Egg and Bad Egg Tips Tamil

கடைகளில் முட்டையை வாங்கும் போது அவை நல்ல முட்டையா? கெட்டுப்போன முட்டையா? என்பதை பார்த்து வாங்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் கடைகளில் அவை சாத்தியமில்லாத நிலையில், காலாவதியான முட்டையை சில அறிகுறிகள் மூலமாக கண்டறிந்துவிடலாம். 

பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி முட்டையை மெதுவாக வைத்தால், அது அடிமட்டத்திற்கு சென்றுவிடும் பட்சத்தில் சாப்பிட உகந்தது. அதனை வேகவைத்து அல்லது பொரித்து சாப்பிடலாம். நீரில் மூழ்காமல் ஓரத்தில் மிதத்தால், அது சாப்பிட நல்லது கிடையாது.

Egg

முட்டையின் மீது ஏற்படும் சல்பர் வாசனை அல்லது விரும்பத்தகாத துர்நாற்ற வாசனை போன்றவை இருந்தால் அந்த முட்டையை சாப்பிடவே கூடாது. முட்டையை காது அருகே வைத்துக்கொண்டு லேசாக குலுக்கி பார்த்தால், எந்த சத்தமும் கேட்கவில்லை என்றால் அது நல்ல முட்டை ஆகும். 

முட்டையின் ஓடுகளில் உள்ள விரிசல் அல்லது பவுடர் போன்ற தடயம் இருந்தால் அது நல்ல முட்டை இல்லை. விரிசல் ஏற்பட்டு இருக்கும் முட்டையில் பாக்டீரியா பரவி இருக்கலாம். முட்டையின் ஓட்டில் பச்சை, நீளம் கருப்பு நிற பூஞ்சை இருந்தாலும் அது சாப்பிட ஏற்றதல்ல.