கண்ணின் கருவளையத்தை போக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்!

கண்ணின் கருவளையத்தை போக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்!


how-to-cure-eye-dark-circle

கண்ணை சுற்றி ஏற்படும் கருவளையத்தை போக்க பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம் என்றும் பாதாம் எண்ணையைத் தொடர்ந்து பயன்படுத்தினால் கண்ணில் ஏற்படும் கருவளையம் எளிதில் மறைந்து விடும் என்று கூறப்படுகிறது.

health tips

இந்த கருவளையம் ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் ஏற்படுகிறது. இந்த கருவளையத்தை போக்க பல மருந்துகளை தடவி வந்தாலும் அது அப்படியே தான் இருக்கும். கருவளையம் ஏற்பட முக்கிய காரணம் முறையற்ற தூக்கம் தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக கருவளையம் வந்துவிட்டால் முக அழகு குறைந்து பொலிவிழந்து காணப்படும். எனவே வைட்டமின் ஏ, டி, இ, மற்றும் மெக்னீசியம், கொழுப்பு மற்றும் அமிலங்களை கொண்டுள்ள பாதாம் எண்ணையை கண்ணின் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவினால் ஒரு சில நாட்களில் கருவளையம் மறைந்து விடும் என கூறப்படுகிறது.

health tips

கருவளையம் உள்ள பகுதியில் இரவு தூங்குவதற்கு முன்பு பாதாம் எண்ணெயை லேசாக தடவி விரல்களால் மசாஜ் செய்து மறுநாள் காலையில் எழுந்து முகத்தை கழுவி வந்தால் கருவளையம் விரைவில் காணாமல் போய்விடும்.