அதிகரித்த உடல் எடையை சிக்கென குறைக்க, இந்த பானங்களை குடித்து பாருங்களேன்.. அசத்தல் மாற்றம்.!

அதிகரித்த உடல் எடையை சிக்கென குறைக்க, இந்த பானங்களை குடித்து பாருங்களேன்.. அசத்தல் மாற்றம்.!


How to Control Weight Drinking Natural Juice

இன்றளவில் உடல் பருமன் பிரச்சனையால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். கொரோனாவால் வீட்டிற்குள்ளேயே முடங்கி, உடல் உழைப்பு என்பது இன்று பெருமளவு குறைந்துவிட்டது. உணவுக்கட்டுப்பாடுகளை பின்பற்றாத காரணத்தால், உடல் எடையும் பலருக்கும் அதிகரித்துவிட்டது. மேலும், தொப்பை பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. 

நமது உடலில் தேங்கும் தேவையில்லாத கொழுப்புகளின் காரணமாக தொப்பை ஏற்படுகிறது. இதனை குறைக்க உதவி செய்யும் சில பானங்களில் எலுமிச்சை சாறும் முக்கியமானது ஆகும். தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறை தேன் கலந்து குடிக்க வேண்டும்.

health tips

இதனால் வயிற்றில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் வெளியேறும். இதனைப்போல, சீரக தண்ணீரும் தொப்பையை குறைக்க உதவி செய்கிறது. மேலும், சீரக தண்ணீருக்கு பசியை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளதால், பசியும் கட்டுப்படுத்தப்படும். 

கற்றாழை செடியின் சதைப்பகுதியை சாறாக தயாரித்து, அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் காலத்து குடிக்கலாம். கற்றாழையில் இருக்கும் ஆண்டி ஆக்சிடென்ட் செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது.