சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
காளான் சமைப்பதற்கு முன் கட்டாயம் இப்படி கிளீன் பண்ணுங்க! இல்லாடி இந்த ஆபத்து நிச்சயம்.....
சுவையான காளானை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் காளான் சரியாக சுத்தம் செய்யப்படாததால் மண்வாசனை மட்டும் இல்லாமல், வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடும். எனவே காளானை முறையாக சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.
காளான் சுத்தம் செய்வது ஏன் முக்கியம்?
காளான் மேற்பரப்பில் மண் மற்றும் அழுக்குகள் நிறைந்திருக்கும். மேலும், இது பூஞ்சை தாவரமாக இருப்பதால் சில ஆபத்தான பூஞ்சைத் தொற்றுகளும் இருக்கக்கூடும். நிபுணர்களின் கூற்றுப்படி, சரியாக சுத்தம் செய்யாத காளான் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
சூடான நீரில் சுத்தம் செய்தல்
காளானை வெதுவெதுப்பான நீரில் போட்டு, அதன் மேற்பரப்பில் இருக்கும் அழுக்குகள் மற்றும் பூஞ்சைகளை கைகளால் மெதுவாக நீக்க வேண்டும். அதிகமாக கொதிக்க வைத்த நீரில் போட தேவையில்லை, கை பொறுக்கும் அளவுக்கு சூடு இருந்தாலே போதும்.
இதையும் படிங்க: வீடு துடைத்த மாப்பை எப்படி கிளீன் செய்வது என குழப்பமா.?! இதோ சூப்பர் டிப்ஸ்.!
உப்பு மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீர்
ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். பின்னர் சுத்தம் செய்யப்பட்ட காளானை அதில் 5 நிமிடங்கள் ஊறவைக்கவும். இதனால் காளானில் இருக்கும் கிருமிகள், பாக்டீரியாக்கள் அழிந்து விடும்.
சுத்தமான நீரில் கழுவுதல்
உப்பு, மஞ்சள் கலந்த நீரில் ஊற வைத்த காளானை மீண்டும் சுத்தமான நீரில் நன்றாக கழுவி வைத்தால் மீதமுள்ள அழுக்குகள், பாக்டீரியாக்கள் முற்றிலும் நீங்கிவிடும். இதனால் சமைத்தபின் காளானில் மண்வாசனை இல்லாமல் இருக்கும்.
இந்த எளிய முறைகளைப் பின்பற்றி காளானை சுத்தம் செய்தால் எந்தவித ஆபத்துகளும் இல்லாமல், ஆரோக்கியமாக சமைத்து சுவைத்து மகிழலாம்.
இதையும் படிங்க: கலர் மாறிய வெள்ளியை புதுசுபோல ஜொலிக்க வைக்கணுமா! இப்படி ஒரு முறை செய்தாலே போதும்....