குறட்டை ஏன் வருகிறது? குறட்டையை தவிர்ப்பது எப்படி?

குறட்டை ஏன் வருகிறது? குறட்டையை தவிர்ப்பது எப்படி?


How to avoid Snoring

 

தற்போதைய வாழ்க்கைமுறையில் அதிகப்படியானோர், குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். என்னதான் குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்துவிடுகிறது. ஒரு சிலரின் குறட்டை சத்தம் அலறுவது போல இருக்கும். இதனால் உடன் படுப்பவர்கள் தூக்கத்தை இழக்க நேரிடும்.

குறட்டை என்பது குரல் வளையில் காற்றானது அளவுக்கு அதிகமாக செல்லும் போது, அதிகப்படியான ஒலியை உண்டாக்குகிறது. அதிலும் காற்றானது வாய் மற்றும் மூக்கின் வழியாக இடையூறுடன் செல்லும் போது அது பெரும் சத்தத்தை ஏற்படுத்துகிறது.

குறட்டையானது சைனஸ், அதிகப்படியான உடல் எடை, குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் ஆகிறவற்றின் காரணமாகவும் ஏற்படும்.

Snoring

குறட்டையை தவிர்க்க எளிய வழிமுறைகள் உள்ளது:
ஒருபுறமாக ஒருக்கணித்து படுப்பதன் மூலம் குறட்டையை தவிர்க்கலாம். அதேபோல் பக்கவாட்டில் படுத்தால், அது குறட்டையை தடுக்கும். பக்கவாட்டில் நீண்ட நேரம் தூங்குவது கடினம். ஆனால் சிறுக சிறுக இதனை கடைபிடித்தால் குறட்டையை தவிர்க்கலாம்.

கொதிக்கவைத்த தண்ணீரில் தைலத்தை போட்டு ஆவிப் பிடித்தாலும், குறட்டை வருவதை தவிர்க்கலாம். அவ்வாறு செய்யும்போது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல வழிவகுக்கும்.

புகைப்பிடிப்பதை தவிர்த்தால் குறட்டையை தவிர்க்கலாம். ஏனெனில் புகைப்பிடிக்கும் போது, அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குவதால், அது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தி குறட்டையை அதிகரிக்கும்.

தூங்கும் நேரத்தில் நொறுக்கு தீனியை தவிர்ப்பது நல்லது. இரவில் தூங்கும் போது பிட்சா, பர்கர் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அது சளியின் உற்பத்தியை அதிகரித்து, குறட்டையை ஏற்படுத்தும்.