தைராய்டு பிரச்சனையால் ஏற்படும் மறைமுக ஆபத்துகள்.. மக்களே அலர்ட்.!



Hidden Dangers of Thyroid Disorders: How They Can Lead to High Blood Pressure

Thyroid Health Alert: தைராய்டு சுரப்பி தனது செயல்பாடுகளை சரிவர செய்ய இயலாமல் போனால் பல்வேறு உடல்நலக்குறைபாடு ஏற்படும்.

ஒழுங்குபடுத்த உதவும்:

தைராய்டு குறைபாடு ஏற்படும் பட்சத்தில், உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். இது இதயம், இரத்த நாளங்களை பாதிக்க வைக்கும். தைராய்டு சுரப்பி சிறியதாக இருப்பினும், உடலின் ஒவ்வொரு நாள் இயக்கத்தில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. கழுத்தின் முன் பகுதியில் இருக்கும் சிறிய சுரப்பின், ஒருவரின் வளர்சிதை மாற்றம், இதயத்துடிப்பு, இரத்த ஓட்டம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்த உதவி செய்கிறது. 

இதையும் படிங்க: Warning: எலி கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?.. அலட்சியமாக இருக்காதீங்க.. உயிருக்கே உலை வைக்கும்.!

உயர் ரத்த அழுத்தம்:

உடலின் இயக்கத்தை தீர்மானிக்கும் தைராய்டு சுரப்பி, ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஹைப்போதைராடிசம் என அழைக்கப்படுகிறது. தைராய்டு ஹார்மோன்களின் அளவு குறையும்போது, உடலில் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, இதயம் மற்றும் ரத்த நாளங்கள் மீதான அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும். 

Lifestyle

இதய பாதிப்பு:

உயர் ரத்த அழுத்த பிரச்சனை உடையவர்கள், தைராய்டு சுரப்பி குறைவாக செயல்படும் விதத்தினை கொண்டிருப்பார்கள். இந்த விஷயத்தை சரிவர கவனிக்காத பட்சத்தில் இதய நோய், பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. உயர் ரத்த அழுத்தத்துடன் ஹைபோ தைராடிசமும் சேர்ந்தால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதயத்துடிப்பு மெதுவாகும். 

பிற பாதிப்புகள்:

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களின் உடல் எடை அதிகரிப்பு, சோர்வு, வறட்சியான தோல், முடி மெலிருந்து போகுதல், மலச்சிக்கல், வழக்கத்துக்கு மாறான குளிர்ச்சி தைராய்டு அறிகுறியாக இருக்கலாம். உடலில் இருக்கும் அதிகளவிலான நீர், உப்பை வெளியேற்றினால் இதுதொடர்பான பிரச்சனை சரியாகும். ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, மனஅழுத்தம் இல்லாமல் இருப்பது, நல்ல உறக்கம், மருத்துவ பரிசோதனைகள் ஆகியவற்றை செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: Health Warning: நாடி நரம்பில் கலக்கும் சோடியம்… கொஞ்சம் கொஞ்சமாக உயிரை எடுக்கும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்.!