"ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மக்கானா!" "இதில் செய்யக்கூடிய ருவையான ரெசிபிக்கள்!"

"ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மக்கானா!" "இதில் செய்யக்கூடிய ருவையான ரெசிபிக்கள்!"



Healthy benefits of eating corn flakes

மக்கானா எனப்படும் தாமரை விதை, இந்தியாவில் ஒரு சிற்றுண்டி வகையாகும். இது குறைவான கலோரிகளைக் கொண்டுள்ளதால் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதில் செய்யக்கூடிய சில எளிதான ரெசிபிக்களைக் காண்போம்.

Makkana

மக்கானா தோசை: ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீருடன் 1 கப் வறுத்த மக்கானா, 1 கப் ரவை, 1/2 கப் அவல், 1/2 கப் கெட்டி தயிர், 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் மேலும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். 

மாவு மிகவும் நீர்த்துப் போகாமல் அரைத்து, இதனை தோசையாக வார்த்து சட்னியுடன் பரிமாறலாம். வறுத்த மக்கானா செய்வதற்கு நெய் அல்லது ஆலிவ் எண்ணை வறுத்து அதில் சீரகத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலா சேர்த்துக் கலந்து சாப்பிடலாம். இது ஒரு குறைந்த கலோரி சிற்றுண்டியாகும்.

Makkana

மக்கானாவில் சுவையான பேல்பூரி செய்யலாம். இதற்கு வறுத்த மக்கானாவில் உருளைக்கிழங்கு, வேர்க்கடலை, மிளகாய், கொத்துமல்லி, வெங்காயம், தக்காளி, மசாலாவை சேர்த்துக் கலந்தால் சுவையான ஊட்டச்சத்து நிறைந்த மக்கானா பேல்பூரி தயார்.