தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
"உணவில் அடிக்கடி வெண் பூசணியை சேர்த்துக் கொள்ள வேண்டும்" ஏன் தெரியுமா.?

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் பல்வேறு சத்துக்கள் சேர்ந்த காய்கறிகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். இதன்படி பல சத்துக்கள் நிறைந்த வெண்பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
முதலில் வெண்பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடம்பில் உள்ள கொலஸ்ட்ராலை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. வெண்பூசணிக்காயை சாராக எடுத்து தினமும் குடித்து வந்தால் வயிற்றில் ஏற்பட்டுள்ள புண்களை ஆற்றும்.
துத்தநாகம் நிறைந்துள்ள வெண்பூசணியை உண்ணும் போது கணையம் போன்ற உடல் உறுப்புகளுக்கு நன்மை பயக்கும். வறண்ட சருமத்திற்கும் இது உதவும். ரத்தத்தை சுத்தப்படுத்தி வருகிறது. சிறுநீர் மூலம் நச்சுக்கள் வெளியேறுகின்றது. இது போன்ற பல்வேறு நன்மைகள் வெண்பூசணியில் இருக்கின்றன.