அடேங்கப்பா.. நாம் தினமும் சாப்பிடும் காய்கறிகளால் இவ்வுளவு பிரச்சனைகள் தீருகிறதா?.. இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.!

அடேங்கப்பா.. நாம் தினமும் சாப்பிடும் காய்கறிகளால் இவ்வுளவு பிரச்சனைகள் தீருகிறதா?.. இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.!


Health Tips Tamil about Vegetables Benefits Daily Eating

 

நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகள், நமது உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன. ஒவ்வொரு காய்கறிக்குள்ளும் பல வகையான வைட்டமின்கள், புரதச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. 

கால்சியம், பாஸ்பிரஸ், இரும்பு சத்துக்கள் பெரும்பாலான காய்கறிகளில் இருக்கின்றன. இன்று காய்கறிகளில் உள்ள சத்துக்களால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.

முருங்கைக்காய் ஆண்களின் விந்தணுவை விருத்தியடைய செய்யும் தண்மை கொண்டது. பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் உதிரப்போக்கினை கட்டுக்குள் வைக்கும். சுரைக்காய் உடலுக்கு ஏற்படும் சோர்வினை சரி செய்யும். வயிற்றில் தங்கும் கொழுப்புகளை கரைக்கும். 

health tips

உருளைக்கிழங்கு மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும். வாழைத்தண்டு சிறுநீரக பாதையில் இருக்கும் கற்களை அகற்றும். வாழைப்பூ மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும். வாழைக்காய் இரத்த சோகை பிரச்சனையை தடுக்கும். குடைமிளகாய் அஜீரண கோளாறுகளை சரி செய்யும். சௌசௌ எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக்கும். 

வெண்டைக்காய் மூளையின் வளர்ச்சியை அதிகரிக்கும். கோவைக்காய் வாய் மற்றும் நாக்கில் இருக்கும் புண்களை சரி செய்யும். சேப்பங்கிழங்கு எலும்பு & பற்களை உறுதிப்படுத்தும்.