தனுஷ் ஆள் பார்க்கத்தான் இப்படி! ஆனால் கேரவனில் அப்படியெல்லாம் நடந்து கொள்வார்! நடிகை அமலா பால் ஓபன் டாக்....



dhanush-kubera-movie-release-and-amala-paul-reveals-food-habit

தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் வெளியீட்டுக்கு தயார்

தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம் ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

குபேரா திரைப்படத்தில் நடித்த முன்னணி நட்சத்திரங்கள்

இப்படத்தை பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இதில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

தனுஷின் திரைப்பயணத்தில் வேலையில்லா பட்டதாரி படத்தின் முக்கியத்துவம்

தனுஷின் திரையுலக வாழ்க்கையில், வேலையில்லா பட்டதாரி திரைப்படம் முக்கிய மைல்கல். இது அவருடைய 25ஆவது திரைப்படம் மட்டுமல்லாமல், ஒரு பிளாக்பஸ்டர் வெற்றி படமாகவும் அமைந்தது. இப்படத்தின் முதல் பாகத்தில் தனுஷ் காதலனாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அவருடன் அமலா பால் மனைவியாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: அதிர்ச்சியில் திரையுலகம்! தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ராஜேஷ் திடீர் மரணம்!

தனுஷின் உணவு பழக்கம் குறித்து அமலா பால் பகிர்ந்த அனுபவம்

சமீபத்தில் நடிகை அமலா பால், தனுஷுடன் வேலை செய்த அனுபவத்தைப் பற்றி பேட்டி அளித்துள்ளார். அதில், “வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுடன் நடித்தபோது, அனைவரும் கேரவனில் ஒன்றாக சாப்பிடுவோம். தனுஷ் உடல் மேனியாக ஒல்லியாக இருந்தாலும், உணவு சாப்பிடும் போது அவருக்கு பெரிய ஆசை. அவர் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவார், ஆனால் முட்டையை மட்டும் விருப்பத்துடன் எடுத்துக்கொள்வார்,” என்று கூறியுள்ளார்.

மேலும், “கவுண்டமணியின் நகைச்சுவையை மிகவும் விரும்புகிறார். சாப்பிடும் போதெல்லாம், அவர் கேரவனில் இருக்கும் டிவியில் கவுண்டமணி சார் நடித்த காட்சிகளை போட்டுவிட்டு, அதைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவார்,” என தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: அடேங்கப்பா.. அஜித் மனைவியும் நடிகையுமான ஷாலினியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?