தலைநிறைய பூவுடன் போஸ் கொடுத்திருக்கும் இந்த குழந்தை டாப் நடிகைகளில் ஒருவர்! யாருனு பாருங்க...



samantha-childhood-photo-viral

திரையுலகத்தில் அன்சீன் புகைப்படங்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகும். அந்த வகையில் தற்போது இந்திய திரையுலகை கவர்ந்த ஒரு முன்னணி நடிகையின் சிறுவயது புகைப்படம் பெரும் வரவேற்பை பெறுகிறது.

தெலுங்கு மூலமாக தமிழ் ரசிகர்களை கைப்பற்றிய நடிகை

இவர் முதலில் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, பின்னர் தமிழ் சினிமாவிலும் நடித்து பெரும் புகழ் பெற்றவர். விஜய், சூர்யா, மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து, மிகச்சிறந்த நடிகையாக வளர்ந்தார்.

சமந்தா

திருமணமும் பிரிவும்

2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு, சில உடல்நல பிரச்சனைகள் காரணமாக சிரமப்பட்டாலும், அதனை தாண்டி மீண்டும் திரையில் சக்திவாய்ந்த நடிகையாக எழுந்தார்.

இதையும் படிங்க: தனுஷ் ஆள் பார்க்கத்தான் இப்படி! ஆனால் கேரவனில் அப்படியெல்லாம் நடந்து கொள்வார்! நடிகை அமலா பால் ஓபன் டாக்....

சினிமா பயணம் மற்றும் சாதனைகள்

சுமார் 13 ஆண்டுகள் திரையுலகத்தில் தொடர்ந்த நடிகை தற்போது அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். ரசிகர்களின் மனதை வசியம் செய்த இவர் வேறு யாரும் இல்லை, அது சமந்தா ரூத் பிரபு தான்.

சமந்தா

சமந்தாவின் தற்போதைய வளர்ச்சி

தற்போது சமந்தா சுபம் திரைப்படம் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். அதோடு, பங்காரம் திரைப்படம் மற்றும் Rakt Brahmand The Bloody Kingdom என்ற வெப் தொடரிலும் முக்கியப் பாத்திரத்தில் நடித்துவருகிறார்.

 

இதையும் படிங்க: படத்திற்காக இப்படி மாறிய கயாடு லோஹர்! டிராகன் பட நடிகை செய்த செயலை பாருங்க! இணையத்தில் வைரலாகும் காணொளி....