சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் மூலிகை கொய்யா டீ செய்வது எப்படி.?



Health benefits of koyya leaf tea

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் கொய்யாப்பழம் நல்லது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

health tips

கொய்யா பழத்தைப் போலவே கொய்யா இலையின் சாறும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதன்படி கொய்யா இலையில் வைட்டமின் சி போன்ற ஆண்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. எனவே கொய்யா இலையில் டீ போட்டு குடித்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

கொய்யா இலை டீ செய்வது எப்படி?

4 பெரிய கொய்யா இலைகளை நன்றாக கழுவி, ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை சூடாக்கி அதில் கொய்யா இலைகளை சேர்த்து, 5 நிமிடம் நன்றாக கொதிக்க விட வேண்டும். அதன் பின்னர் அந்த நீரை வடிகட்டி அறை எலுமிச்சை பழ சாற்றை சேர்க்க வேண்டும். அந்த நீரில் சுவைக்கு ஏற்ப தேனை நன்றாக கலந்து குடிக்கலாம்.

health tips

இவ்வாறு செய்யப்படும் கொய்யா இலை டீ குடிப்பதால் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும், இன்சுலின் எதிர்ப்பை சரிசெய்யும்.

அதிலும் குறிப்பாக சாப்பிட்ட பிறகு கொய்யா இலை தேநீர் குடிப்பது குளுக்கோஸ் புரிஞ்சுதலை தடுப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அதிகமாவதை குறைக்கிறது.