தினமும் 5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டுமா? ஒருநாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும் தெரியுமா?



Health benefits of drinking water in tamil

தண்ணீர் என்பது மனிதன் தொடங்கி அனைத்து உயிர்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்று. ஆரோக்கியமாக வாழ மனிதன் தினமும் போதிய அளவு நீர் அருந்தவேண்டும் என்பது மருத்துவர்கள் கூறும் அறிவுரை. நமது உடலின் அணைத்து செயல்பாடுகளுக்கும் நீர் மிக முக்கியமான காரணியாக செயல் படுகிறது.

குழந்தைகளை பொறுத்தவரை  அவர்கள் ஓடியாடி விளையாடும்போது தண்ணீர் வியர்வையாய் வெளியேறி விடுகிறது. உங்கள் குழந்தைகள்  தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் வெப்பம் அதிகரித்து அவர்களுக்கு தீங்கு ஏற்பட வாய்ப்பு மிகவும் அதிகம். சில குழந்தைகள் தண்ணீர் குடிக்கவே மறுத்தாலும் பெற்றோர்கள் வற்புறுத்தியாவது குறிப்பிட்ட அளவு தண்ணீரைக் குடிக்கச் செய்ய வேண்டும்.

நம் உடலின் செயல்பாடுகளை முறையாக செயல்படுவதற்கு நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் உடலில் உள்ள பெரும்பாலான உறுப்புகள் நீரினால் உருவானது. தசைகள் 70 சதவீதமும் மூளை 90 சதவீதமும் இரத்தம் 83 சதவீதமும் நீரால் உருவாகியுள்ளது.

water


சரி. யார் யார் எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்பது பற்றி பாப்போம் வாங்க:

 1 முதல் 3 வயது வரை -4 டம்ளர்கள்

 4 முதல் 8 வயது வரை-5 டம்ளர்கள்

 9 முதல் 13 வயது வரை - ஆண்8 டம்ளர்கள்,பெண்7 டம்ளர்கள்

 11முதல் 18 வயது வரை - ஆண் 11 டம்ளர்கள், பெண் -8 டம்ளர்கள்

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1.5 லிட்டர் நீராவது கட்டாயம் அருந்தவேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிகநேரம் வெயிலில்  வேலை செய்பவர்கள் 3 லிட்டர் நீர் கட்டாயம் குடிக்க வேண்டும். கோடைகாலம் வந்துவிட்டால் 4 முதல் 5 லிட்டர் நீர் அருந்தவேண்டும்.

அதே போன்று நீங்கள் நீர் அருந்தும் போது நீரை உங்கள் வாய் நிறைய நிரப்பிக்கொண்டு, உங்கள் எச்சில் நீரில் கலக்கும் மாறு பார்த்துக்கொள்ளுங்கள். பின்பு சிறிது சிறிதாக நீரினை அருந்துங்கள். அவ்வாறு செய்யும் பொது உங்கள் எச்சில் நீரில் கலந்து உங்கள் உணவு ஜீரணமாவதற்கு எளிதாக்குகிறது.