அடடே.. காரமான பச்சை மிளகாயில் சுவையான அல்வா செய்யலாமா?.. புதுசா இருக்கே.. தெரிஞ்சுக்கோங்க..!!

அடடே.. காரமான பச்சை மிளகாயில் சுவையான அல்வா செய்யலாமா?.. புதுசா இருக்கே.. தெரிஞ்சுக்கோங்க..!!


Green chilli halwa recipe

அறுசுவைகளில் முக்கியமான ஒன்றாக பச்சை மிளகாயின் பங்கு என்பது முக்கியமான ஒன்று. ஒவ்வொரு உணவிலும் நறுமணம் மற்றும் காரச்சுவையை அதிகரிக்க பச்சை மிளகாய் உபயோகம் செய்யப்படுகிறது. இதனை பல வகைகளில் நாம் தயாரித்து பயன்படுத்துகிறோம். இன்று அதில் சுவையான அல்வா செய்வது எப்படி என காணலாம்.

தேவையான பொருட்கள் :

பச்சை மிளகாய் - 2 கப் 

சர்க்கரை - ஒரு கப்

திராட்சை, பாதாம், முந்திரி - தேவையான அளவு 

நெய் - 6 தேக்கரண்டி 

சோள மாவு - 2 தேக்கரண்டி

health tips

செய்முறை :

★முதலில் எடுத்துக்கொண்ட வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

★பின்னர் பச்சை மிளகாயை விதைகள் நீக்கி, நீலவாக்கில் நறுக்கி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். 

★மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் நீரில் பச்சை மிளகாயை போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இதனால் மிளகாயில் உள்ள காரத்தன்மையானது குறையும் 

★இந்த முறையை மூன்று முறை செய்ய வேண்டும். பின்னர் சூடு ஆறிய பின்னர் மிளகாயை மிக்ஸியில் சேர்த்து அரைத்து விழுது போல எடுத்துக்கொள்ள வேண்டும்.

★அடுத்து வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி மிளகாய் விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மிளகாயின் பச்சை வாசனை சென்ற பின்னர் அதனோடு சர்க்கரை சேர்க்கவும். 

★இந்த இரண்டு கலவையுடன் சோளமாவு சேர்த்து நன்கு கிளறினால், நெய் பிரிந்து வரும் தருணத்தில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை சேர்த்து இறக்கினால் சுவையான மிளகாய் அல்வா தயார்.