மாமிசத்திற்காக விற்கப்பட்ட ஆடு..! தன்னை வளர்த்தவரிடம் இறுதியாக கட்டியணைத்து கதறி அழுத வீடியோ.!

மாமிசத்திற்காக விற்கப்பட்ட ஆடு..! தன்னை வளர்த்தவரிடம் இறுதியாக கட்டியணைத்து கதறி அழுத வீடியோ.!


goat crying with owner

பக்ரீத் திருநாள் மாமிசத்திற்காக விற்கப்பட்ட ஆடு தன்னை வளர்த்தவரிடம் இறுதியாக தன் வேதனையை அழுத குரலில் கத்தியதால் அதனை வாங்க வந்தவர்கள் அந்த ஆட்டினை வாங்காமல் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி எனப்படும் இறைச்சி ஏழைகள், நண்பர்களுக்கு கொடுப்பது வழக்கம். மேலும் பிரியாணி சமையலும் உண்டு. அன்றைய தினம் இறைச்சி கடைகளிலும் ஆட்டிறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறும்.

இந்தநிலையில், பக்ரீத் திருநாள் மாமிசத்திற்காக விற்கப்பட்ட ஆடு தன்னை வளர்த்தவரிடம் கட்டியணைத்து அழுதுள்ளது. இதனை பார்த்ததும் அந்த ஆட்டினை வாங்கிய நபர் பணத்தை பெற்றுக்கொண்டு அந்த ஆட்டின் உரிமையாளரிடமே ஆட்டை கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.