கலக்கல் வீடியோ! "பட்டாசு வெடிக்கிற டைம் சொல்லிட்டீங்க.. முறுக்கு சுடுற டைம் சொல்லலீங்களேயா.."

கலக்கல் வீடியோ! "பட்டாசு வெடிக்கிற டைம் சொல்லிட்டீங்க.. முறுக்கு சுடுற டைம் சொல்லலீங்களேயா.."


girl-tik-tok-video-about-diwali

வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட இருப்பதால் உச்சநீதிமன்றம் இந்த வருடம் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை பற்றி பல நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் அந்த நிபந்தனைகள்:

தீபாவளி தினத்தன்று பகல் நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை
இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். 

குறைந்த அளவிலான புகை மற்றும் சத்தம் வெளியிடும் பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

girl tik tok video about diwali

உரிமம் உள்ளவர்கள் மட்டுமே பட்டாசுகளை விற்க வேண்டும்.

அதிகமான அளவு அலுமினியம் கலந்த பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.

ஆன்லைன் மூலம்  பட்டாசுகளை விற்பனை செய்ய தடை.

விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனை செய்வோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

இந்த தடைகளுக்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் ஒரு பெண் தன் மகனுடன் இணைந்து டிக் டாக் ஆப்பில் மூலம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் அந்த பெண் பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார். அந்த விடியோவை நீங்களே பாருங்க: