அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
காகம் வீட்டிற்கு அடிக்கடி வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? வாஸ்து பார்வையில் விளக்கம் இதோ...
நம் முன்னோர் கூறிய நம்பிக்கைகள் ஒவ்வொன்றிற்கும் ஏதோ ஒரு காரணம் உண்டு. “வீட்டிற்கு காகம் வந்தால் நன்மை நடக்கும்” என்பது அனைவரும் கேட்டிருப்போம். உண்மையில், பறவைகள் மற்றும் விலங்குகள் பல நிகழ்வுகளுக்கு முன்பே ஒரு அனுபவ உணர்வு கொண்டிருப்பது தெரிந்த விஷயம்.
அதில், காகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வீட்டிற்கு வரும் காகங்களின் செயல்கள், வாஸ்து அடிப்படையில் பல அர்த்தங்களை கொண்டிருக்கும். சில நேரங்களில் இது நேர்மறையான சின்னமாகவும், சில சமயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அறிகுறியாகவும் அமைகிறது.
காகம் கத்தும் ஒலி – பயணத்தில் வெற்றி
பயணத்திற்கு செல்லும் போது, வீட்டிற்கு அருகில் காகம் உரத்த குரலில் கத்தினால், அந்த பயணம் வெற்றிகரமாக முடியும் என நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: சிறுநீரை அடக்கி வைப்பவரா நீங்கள்? பாதிப்பு நிச்சயம்! என்னவெல்லாம் பிரச்சனை வரும்னு பாருங்க! எச்சரிக்கும் மருத்துவர்கள்....
காகம் பறக்கும் திசைகள் – வாஸ்து அர்த்தம்
மேற்கு நோக்கி பறப்பது: வேலை, நேர்காணல் போன்றவற்றில் வெற்றி அதிகம்.
வடக்கு அல்லது கிழக்கு நோக்கி பறப்பது: வீட்டிற்கு நெருக்கமான ஒருவர் வரப்போகிறார் என்பதற்கான அறிகுறி.
தெற்கு பக்கம் அமர்வது: இது ஒரு எச்சரிக்கையான நேரம், அபாயம் நிகழலாம்.
காகங்கள் கூடி சத்தமாக கத்தினால்
பல காகங்கள் சேர்ந்து சத்தமாக கத்தினால், அது ஒரு எதிர்பாராத சம்பவம் ஏற்படக்கூடிய அறிகுறி. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
காகம் உணவுகளை சாப்பிடுவது – ஆசைகள் நிறைவேறும்
காகம் வீட்டில் வந்து உணவுகளை சாப்பிட்டால், அது உங்கள் ஆசைகள் விரைவில் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது.
காகங்கள் சாதாரண விலங்குகள் மட்டுமல்ல; அவை பலருக்கும் வாழ்க்கையில் வழிகாட்டிகள் ஆக இருக்கின்றன. வாஸ்துப்படி, இந்த அறிகுறிகளை கவனித்தால் உங்கள் வாழ்க்கையில் நன்மை கிடைக்கும்.

