மனிதனை விட ஸ்டெயிலாக சிகரெட் அடிக்கும் நண்டு! வைரல் வீடியோ!

மனிதனை விட ஸ்டெயிலாக சிகரெட் அடிக்கும் நண்டு! வைரல் வீடியோ!


crab-smoking-video

புகை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது தெரிந்தே பலர் புகைப்பழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வருடமும்,  உலகம் முழுவதும் 71 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்துவதால் மட்டுமே உயிரிழக்கின்றனர். இதில் ஏறத்தாழ  9 லட்சம் பேர், புகைப்பவரின் அருகிலிருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் என சமீபத்தில் தகவல் வெளியானது.

புகைப்பழக்கத்தால் நுரையீரல் தொற்று ஏற்படும். அது, நிரந்தர நுரையீரல் செயலிழப்புக்குக் காரணமாகிவிடும். இதனால், ஆக்சிஜனை வெளியிலிருந்து செயற்கை முறையில் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும். 

புகைப்பழக்கத்தால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. புகைப்பழக்கம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டும் இந்த பிரச்சனையல்ல... அவர்களை சார்ந்தவர்களுக்கும் தான். எனவே இந்த பழக்கத்தை உடனே விட்டுவிடுங்கள். உலகில் மனிதனுக்கு இணையாக நானும் இருக்கிறேன் என்பதை போல நண்டு ஒன்று புகைபிடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யாரோ புகை பிடித்து விட்டு கீழே போட்ட சிகரெட்டை நண்டு எடுத்து புகைக்கிறது. இதுவும் மனிதர்கள் செய்த தவறே என நெட்டிசன்கள் கோபமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.