Cow Vs Buffalo Milk: பசும் பால் Vs எருமை பால்.. குழந்தைகளுக்கு எது சிறந்தது?



Cow Milk Vs Buffalo Milk Which Is Best for Children’s Health?

ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தும் பார்வையில் பசும் பால் மற்றும் எருமை பால் குறித்த வித்தியாசங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

எது சிறந்தது?

உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பால் பருகும் போது பசும் பால் பருகுவது அல்லது எருமை பால் பருகுவது சிறந்தது என்ற கேள்வி பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில், இரண்டு பாலும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட சிறந்த மூலங்களாகும். எருமை பாலில் அதிக கொழுப்பு மற்றும் புரதம் காணப்படுவதால் இது அடர்த்தியாகவும், செரிமானத்திற்கு அதிக நேரம் எடுக்கும் தன்மையுடையதாக இருக்கிறது. இதனால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டு உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.

இதையும் படிங்க: ஓ.. இதுதானா! ஆண்களின் வயிறு பெருதாவதற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா? இனி கவனமா இருங்க...

Cow Milk Benefits

பசும்பால்:

பசும் பால் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நீர் சத்துடன் உள்ளதால் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் பசும் பால் மிகவும் ஏற்றதாகும்.தமிழ்நாட்டில் பசு மாடுகள் அதிகமாக வளர்க்கப்படுவதால் பசும் பால் எளிதில் கிடைக்கும். ஆனால் எருமை பால் குறைவாக கிடைக்கும், விலையும் அதிகம். 

Cow Milk Benefits

எருமைப்பால்: 

எருமை பாலை உட்கொள்ளும் போது அதிகமான புரதம், கொழுப்பு மற்றும் கால்சியம் கிடைக்கிறது. இது முதுகு, எலும்பு மற்றும் பற்களுக்கு நல்லது. வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால், அதிக உணவை தவிர்க்கலாம். உடல் எடையை கட்டுப்படுத்த உதவும். குழந்தைகளுக்கு பசும்பால் வழங்குவது நல்லது. ஏனெனில், இது எளிதில் ஜீரணமாகும். ஒருவரின் உடல்நலன் மற்றும் தேவைகளின் அடிப்படையில் பாலை தேர்வு செய்யலாம்.