மருத்துவம் லைப் ஸ்டைல்

இரத்த கொதிப்பு, சுகர், கிட்னி, ஹார்ட் பிராப்ளம்..! இவர்களை கொரோனா எளிதில் தாக்குமாம்..! அதிர்ச்சித் தகவல்.

Summary:

Corono easily affect high bp and diabetics persons

உலகம் முழுவதும் தீவிரமாகிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும், கொரோனவை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியும் நடந்துவருகிறது. உயிரை பறிக்கும் இந்த கொரோனாவில் இருந்து தப்பிக்க அரசு அறிவுறுத்திவரும் நடைமுறைகளை கட்டாயம் கையாளவேண்டும்.

அதிலும், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக கோளாறு,ஹார்ட் பிராப்ளம் ஆகிய பிரச்னைகளால் அவதிபடும் நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லுாசியானா பல்கலைக்கழக பேராசிரியர் கேம்ஸ் டியாஸ் மற்றும் அவரது குழுவினர் இதுகுறித்த அதிர்ச்சி ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக கோளாறு,ஹார்ட் பிராப்ளம் போன்ற நோயாளிகள் உட்கொண்டுவரும் மாத்திரைகள் மூலம் இதயம் மற்றும் நுரையீரலுக்கு இடையிலான ரத்த ஓட்டத்தில், ஏ.சி.சி., - 2 எனப்படும், ஆஞ்சியோடென்சின் கன்வர்டிங் என்சைம் - -2 ரிசெப்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ரிசெப்டர்களை கொரோனா வைரஸ் தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்டு இவர்களை எளிதில் தாக்குகிறது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1,099 நோயாளிகளின் மாதிரிகளை வைத்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

இதனால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் மாதிரிகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி நிறுத்தவோ அல்லது மாற்றவோ கூடாது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு செல்லாமல், தங்களை தனிமைப்படுத்திக்கொண்டாலே போதுமானது.


Advertisement