சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
பசியில் துடித்த கை இல்லாத குரங்கிற்கு வாழைப்பழத்தை உரித்து ஊட்டிவிட்ட காவலர்.! வைரல் வீடியோ.!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனவை கட்டுப்படுத்தவும், அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவும் அணைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவும் வரும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் மக்கள் அனைவரும் வீடுகளிலையே முடங்கி இருக்கும் நிலையில், மனிதர்கள் தரும் உணவை நம்பி வாழ்ந்துவரும் பல உயிரினங்கள் சாப்பாடு இல்லாமல் தவித்துவருகிறது.

இந்நிலையில், உணவை சாப்பிட கைகூட இல்லாமல், பசியில் சுற்றித்திரிந்த குரங்கு ஒன்றுக்கு காவல்துறை அதிகாரி ஒருவர் வாழைப்பழத்தை உரித்து ஊட்டிவிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. வடமாநில காவலர் ஒருவர் மாஸ்க் அணிந்தபடி போனில் பேசிக்கொண்டே வாழைப்பழத்தை, கையில்லா குரங்கு ஒன்றுக்கு ஊட்டிவிடுகிறார்.
இந்த சம்பவம் வீடியோவாக தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.