"என் அம்மா வயசானவங்க.. தயவுசெய்து விட்டிடுங்க.." கெஞ்சி கேட்கும் சின்மயி..!

"என் அம்மா வயசானவங்க.. தயவுசெய்து விட்டிடுங்க.." கெஞ்சி கேட்கும் சின்மயி..!


Chinmayi request bot to disturb her mom

பின்னணிப் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக பதிவிட்டார். இந்த பிரச்னை நாடு முழுவது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 

மேலும் பாலியல் தொல்லைகளில் சிக்கிய பலர் பாடகி சின்மயிடம் தங்களது குறைகளை கூறி வருகின்றனர். இதனை சின்மயி அவரது #MeToo என்ற ஹாஸ்டேக் மூலம் டுவிட்டர் பக்கத்தில் பகிரங்கமாக வெளியிட்டு வந்தார். இதன் மூலம் பல பிரபலங்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இந்நிலையில் பல ஊடகவியலாளர்கள் சின்மயியின் அம்மாவை தொடர்புகொண்டு தகவல்கள் பெற முயன்றுள்ளனர் என்று தெரிகிறது.

இதனால் கோபமடைந்துள்ள சின்மயி தற்போது பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  "சென்னை ஊடக நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தயவுசெய்து என் அம்மாவிற்கு கால் செய்து பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். அவரிடம் இருந்து நீங்கள் எந்த தகவலும் கேட்க வேண்டாம். 

MeToo

அவரை விட்டு தயவுசெய்து விலகியிருங்கள். அவருக்கு இப்போது 69 வயதாகிறது. அவரால் எல்லா மன அழுத்தங்களையும் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே இதோடு எல்லாவற்றையும் நிறுத்திக்கொள்ளுங்கள். அவரை தொந்தரவு செய்யாதிருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.