சென்னையில் இளம் பெண்ணிடம் ஏமாந்து ஸ்கூட்டரை இழந்த இளைஞர்! கடைசியில் நடந்த சுவராஸ்யம்

சென்னையில் இளம் பெண்ணிடம் ஏமாந்து ஸ்கூட்டரை இழந்த இளைஞர்! கடைசியில் நடந்த சுவராஸ்யம்


boy lost his scooter to a girl

சென்னையில் இளைஞரிடம் லிப்ட் கேட்ட இளம் பெண் அவரை ஏமாற்றி இளைஞரின் ஸ்கூட்டரை பறித்து சென்றுள்ளார். 

சென்னை மணலியை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர், சம்பவத்தன்று தனது ஸ்கூட்டரில் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒரு இளம் பெண் லிப்ட் கேட்டுள்ளார். இளம்பெண் என்றால் எப்படி லிப்ட் கொடுக்காமல் இருக்க முடியும்?

தினேஷும் லிப்ட் கொடுக்க, அந்த பெண் அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்துள்ளார். அவரும் அதே பகுதியில் வசிப்பதாகவும், அவருடைய தாய் உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவளின் தாயை மருத்துமனைக்கு அழைத்து செல்ல வண்டி எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

boy lost bike in chennai

பின்னர் தினேஷிடம் அவரது ஸ்கூட்டரை தர முடியுமா என்று கேட்க, தினேஷ் தங்கியுள்ளார். அப்போது அந்த பெண் தன் மொபைல் நம்பரை கொடுத்துள்ளார்.  மொபைல் நம்பரை சரிபார்த்த தினேஷ், அந்த பெண்ணை நம்பி வண்டியை கொடுத்துள்ளார்.

அரைமணி நேரத்தில் வருவதாக கூறி சென்ற பெண் வராததால், அச்சமடைந்த தினேஷ் அந்த நம்பருக்கு கால் செய்துள்ளார். ஆனால் அந்த நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனை கண்டு பதற்றமடைந்த தினேஷ் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

போலீசார் மொபைல் நம்பரை வைத்து ட்ராக் செய்த போது, அது தடா பகுதியை காட்டியுள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் சென்னை எல்லைக்குள்  வருவது போல் இருந்தது. உடனே உஷாரான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

வேறு ஒரு இளைஞருடன் அந்த பெண் அதே வண்டியில் வருவதை பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், இன்று தன் காதலன் பிறந்த நாள் என்றும், அவர்கள் வெளியில் செல்ல வண்டி இல்லாததால் தினேஷிடம் வண்டியை வாங்கி தடா சென்றதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து ஸ்கூட்டரை மீட்ட காவல்துறையினர், வண்டியை தினேஷிடம் ஒப்படைத்தனர். காதலுக்காக அந்த பெண் செய்த செயலை கண்டு மனமுறுகிய தினேஷ் அவர்களை எதுவும் தண்டிக்காமல் விட்டுவிடுமாறு போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். அவர்களும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.