எந்த மீன்களை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

எந்த மீன்களை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது? வாங்க தெரிஞ்சுக்கலாம்!



Benefits of ate fishes

பொதுவாக அசைவ பிரியர்களின் முக்கிய உணவாக இருப்பது மீன்கள். அந்த வகையில் மீன்கள் பல வகைகளில் மாறுபடுகின்றன. அதன்படி ஆறு, ஏரி, குளம், குட்டை, கடல்களில் இருந்து இடிக்கப்படும் நீங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான உடலமைப்பு மற்றும் சத்துக்களை கொண்டுள்ளது.

அந்த வகையில் ஏரி, ஆறு மற்றும் கடலில் வாழும் மீன்களில் எது அதிக சத்து உடையது என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். மீன்களின் பொதுவாகவே கொழுப்பு இல்லாத உணவு என்பதால் மீன்களை அனைவரும் சாப்பிடலாம்.

fish

அந்த வகையில் மீன்களில் ஏராளமான புரத சத்து அடங்கியுள்ளது. இதில் கடலில் வளரும் மீன்கள் கடல்பாசியை சாப்பிட்டு வளர்வதால் அவற்றில் ஒமேகா 3 அமிலம் என்ற அமிலம் உள்ளது. அதிலும் குறிப்பாக மத்திய சங்கரா போன்ற மீன்களில் ஒமேகா 3 அமிலம் அதிக அளவில் உள்ளது.

ஆனால், ஆறு மற்றும் ஏரிகளில் வாழும் மீன்கள் குழு பூச்சிகளை மட்டுமே சாப்பிட்டு வளர்கிறது. இந்த வகை மீன்களில் ஒமேகா 3 அமிலம் இருக்காது. ஆனால் இத்தகைய அமிலம் இல்லாவிட்டாலும் பல ஊட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளது.

fish

ஆற்று மீன்களில் கெண்டை மற்றும் ஜிலேபி, உறவை மீன்களில் அதிக புரத சத்து நிறைந்துள்ளது. எனவே எந்த வகை மீனை சாப்பிட்டாலும் உடலுக்கு பல்வேறு வகையான சத்துக்களை கொடுக்கிறது.