ஆரோக்கியமான குடலுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்..

ஆரோக்கியமான குடலுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்..



Avoid this foods for healthy digestive system

நமது குடல்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் மூளையும் நன்றாக வேலை செய்யும். ஏனெனில் குடல்கள் மூளையுடன் நேரடித் தொடர்பு உடையவை. உணவுக் கட்டுப்பாடு இல்லாமல் கண்டதையும் உண்ணும்போது குடல்கள் சேதமடைகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். 

Digestive

சிவப்பு இறைச்சியை அதிகமாக உண்ணும்போது குடல்கள் பாதிக்கப்பட்டு உள்ளேயே அழுக ஆரம்பித்துவிடும். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரொட்டி, பீட்சா, பர்கர், கேக், பிஸ்கட் போன்ற துரித உணவுகள் குடல்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகின்றன.

மேலும் சோடா, எனர்ஜி ட்ரிங்க்ஸ் போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால் அவற்றை குடிக்கும்போது வயிற்றில் அமிலம் உருவாகிறது. இதுபோல் அமிலம் தொடர்ச்சியாக படிவது குடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் எண்ணையில் பொறித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

Digestive

அமில உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும் குடல் ஆரோக்கியமாக இருக்க அனைத்து சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவுகளை உண்ணவேண்டும். மேலும் குடலை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமே நம் உடலின் ஆரோக்கியம் மேம்படும்.