மாடியில் இருந்து தலைகீழாக விழுந்த குழந்தை; பதறவைக்கும் காட்சி.. பெற்றோர்களே உஷார்.!
வீட்டில் குழந்தைகள், இளம் வயதுள்ளவர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் எதாவது வேலை செய்வது, ஓடுவது, ஆடுவது என இருப்பார்கள். சில நேரம் அவர்களின் அதீத செயல்பாடு, எதிர்பாராத விபத்துக்கும் காரணமாக அமையும். அதனால் பெற்றோர், தங்களின் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும்.
அதேவேளையில், அவர்களுக்கு சில அறிவுரைவுகளையும் வழங்க வேண்டும். குறிப்பாக மாடிப்படியில் ஓரங்களில் நின்றபடி கீழே தலைகளையும்-உடலையும் சாய்ந்தவாறு பார்க்க கூடாது, சாலையில் ஓரமாக இடப்புறம் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது குறித்த சின்னச்சின்ன விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டாம்.
கீழே விழுந்த குழந்தை
இந்நிலையில், எங்கு பதிவு செய்யப்பட்டது என்பது தெரியாத வீடியோ ஒன்று, குழந்தைகளை கவனியுங்கள் என்ற தலைப்பில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், வீட்டில் இருக்கும் குழந்தை மொட்டைமாடிக்கு சென்றுள்ளது. பின் அங்கிருந்து கீழே வரத்தயாரானது.
இதையும் படிங்க: ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண்கள்; காலை தூக்கி வேலையை காண்பித்த நாய்.. கலக்கல் கலாய் காணொளி.!
அப்போது, ஒரு குழந்தை மாடிப்படியில் இருக்கும் கம்பிகளை மேலே இருந்தவாறு பிடித்து கீழே வேடிக்கை பார்க்க, அச்சமயம் சற்றும் எதிர்பாராத நேரத்தில் கீழே தவறி தலைகீழாக விழுந்தது. நல்வாய்ப்பாக குழந்தை சிறிய அளவிலான காயங்களுடன் உயிர்தப்பியது.
இந்த விடியோவை தற்போது வெளியிட்டுள்ளவர்கள், குழந்தைகளை பத்திரமாக கவனித்துக்கொள்ளுங்கள் என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டு இருக்கின்றனர். பார்க்கவே பதறவைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஊதிய உயர்வு கேட்ட பணியாளரும், சாதுர்யமாக சமாளித்த முதலாளியும்.. இப்படித்தான் பலபேர் இருக்காங்க போலயே?.!