ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண்கள்; காலை தூக்கி வேலையை காண்பித்த நாய்.. கலக்கல் கலாய் காணொளி.!
சமூக வலைத்தளங்களின் பயன்பாடு & அறிமுகத்திற்கு பின்னர் ரீல்ஸ் மோகம் என்பது பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எங்கு சென்றாலும், எந்த சூழ்நிலையிலும் ஒரு ரீல்ஸ் எடுக்கலாமா? என்ற கேள்விகளை ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் சாதாரணமாக கேட்க தொடங்கிவிட்டனர்.
மடைமாறும் ரீல்ஸ் மோகம்
ரீல்ஸ் விடியோக்கள் ஒருசில நேரங்களில் தனிநபர்களின் திறமைகளை கண்டறியாகவும், அதனால் அவர்கள் சமூகத்தில் மதிக்கத்தக்க நிலைக்கும் காரணமாக அமைந்துள்ள எனினும், 80 % மாறுபட்ட கோணங்களில் மட்டுமே அவை உபயோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஊதிய உயர்வு கேட்ட பணியாளரும், சாதுர்யமாக சமாளித்த முதலாளியும்.. இப்படித்தான் பலபேர் இருக்காங்க போலயே?.!
ரீல்ஸ் போன்ற விடீயோக்களுக்கு அடிமையானோர், ஒருசில நேரம் தனிநபர் பாதுகாப்புகளை அச்சுறுத்தும் வகையிலும் தங்களின் பதிவுகளை முன்னெடுக்கின்றனர். ஒருசில நேரம் அவர்களின் வீடியோ நெட்டிசன்களிடையே கலாய்க்கும் அளவும் காட்சிகளை கொண்டிருக்கும்.
நாயின் செயல்
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், பெண்கள் கூட்டமாக சேர்ந்து ரீல்ஸ் எடுக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் தங்களின் ஸ்மார்ட்போனை கீழே வைத்து வீடியோ எடுக்கின்றனர். அச்சமயம் அங்கு வந்த நாய் ஒன்று, செல்போனில் சிறுநீர் கழித்துச் சென்றது.
இதனை சற்றும் எதிர்பாராத பெண்கள் தங்களின் செல்போனை காப்பாற்ற முற்பட்டும் பலனில்லை. இதுகுறித்த காணொளி வைரலாகி வருகிறது.