சற்று முன்... லீக்கானது தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி...... ஏப்ரலில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டம்!!!



tamil-nadu-assembly-election-date-announcement-expected

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தேதியை அறிவிக்கும் அறிவிப்பு குறித்து கட்சிகள் மற்றும் அரசியல் பகுப்பாய்வாளர்கள் கவனமாகக் காத்திருக்கின்றனர்.

மார்ச் 15-ல் தேர்தல் தேதி அறிவிப்பு?

இந்திய தேர்தல் ஆணையம் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் அட்டவணை குறித்து இறுதி ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மோடி நிகழ்ச்சிக்குப் பிறகு அறிவிப்பு?

மேலும், கொல்கத்தாவில் மார்ச் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள பாஜகவின் ‘பரிவர்த்தன் யாத்திரை’ நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றிய பிறகு தேர்தல் தேதிகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: BREAKING: தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் தேதி...... வெளியானது முக்கிய அறிவிப்பு!!!

ஏப்ரலில் ஒரே கட்ட தேர்தல் திட்டம்

தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் மாநில அரசியல் சூழ்நிலை மேலும் சூடுபிடித்துள்ளது. தேர்தல் அட்டவணை வெளியானதும் அனைத்து கட்சிகளும் முழுமையான பிரசாரத்துக்குத் தயாராகும் என்பதால், தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் அதிகரித்து வருகிறது.

 

இதையும் படிங்க: மே மாதத்தில் ஒரே நாள், ஒரே கட்ட தேர்தல்! ஓரிரு வாராங்களில் தமிழக தேர்தல் தேதி.... முக்கிய அறிவிப்பு வெளியானது!!!