ஊதிய உயர்வு கேட்ட பணியாளரும், சாதுர்யமாக சமாளித்த முதலாளியும்.. இப்படித்தான் பலபேர் இருக்காங்க போலயே?.!
பெரு நிறுவனங்கள் முதல், சிறு நிறுவனங்கள் வரை ஒவ்வொரு நிறுவனமும் தனது ஊழியர்களை வைத்து பலனடைகிறது. ஆனால், அந்த நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு ஊதியத்தை பெரும்பாலும் சரியாக வழங்குவது இல்லை. இந்தியாவில் பல இலட்சக்கணக்கான நிறுவனங்கள் இருந்தாலும், அவற்றில் 10% நிறுவனங்கள் மட்டுமே தனது பணியாளர்களின் எதிர்காலம், அவர்களின் வேலைக்கான சம்பாத்தியம் ஆகியவற்றை வழங்குகிறது.
வைரல் பதிவு
பிற நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை அளந்தே வழங்குகிறது. இந்த நிலை மாறுவதற்கு வெகுகாலம் ஆகும் எனினும், ஒவ்வொரு நிறுவனத்திலும் வேலை பார்க்கும் ஊழியரின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக ஊதிய உயர்வு போன்றவை இருக்கிறது. அவை உரிமையாளர்களால் முடிவு செய்யப்படும் எனினும், ஊதிய உயர்வு கேட்கும் நபருக்கும் - முதலாளிக்குமான வாதம் தொடர்பான சுவாரஷ்ய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த முகநூல் பதிவில், சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
முதலாளி
நீ flightல போய்கிட்டு இருக்க, அதில் 50 செங்கல் இருக்கு, அதில் ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா மீதி எவ்ளோ இருக்கும்?
வேலையாள்
49 இருக்கும்.
முதலாளி
ஒரு யானையை எப்படி 3 Stepல fridgeக்குள் வைப்பது?
வேலையாள்
Fridgeஐ திறக்கனும், யானையை உள்ளே வைக்கணும், fridgeஐ மூடணும்.
முதலாளி
ஒரு மானை எப்படி 4 Stepல் fridgrக்குள் வைப்பது?
வேலையாள்
fridgeஐ திறக்கணும், யானையை வெளியே எடுக்கணும், மானை உள்ள வைக்கணும், fridgeஐ மூடணும்.
முதலாளி
அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள் எல்லா விலங்கும் வந்துருச்சு ஒன்னு மட்டும் வரல.. அது எது?
வேலையாள்
மான், ஏன்னா அது fridgeக்குள்ள இருக்கு.
முதலாளி
முதலைகள் வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கணும், என்ன பண்ணுவாங்க.?
வேலையாள்
தாரளமாக கடக்கலாம், எல்லா முதலைகளும் சிங்கத்தோட பிறந்தநாள் பார்ட்டிக்கு போயிருச்சு.
முதலாளி
ஆனாலும் பாட்டி இறந்துட்டாங்க எப்படி?
வேலையாள்
குளத்தில் மூழ்கிட்டாங்க..
முதலாளி
அதான் இல்ல, முதல்ல flightல இருந்து ஒரு செங்கலை தூங்கி போட்டே இல்ல, அது பாட்டி மண்டையில் விழுந்துருச்சு... இப்படி கவனம் இல்லாம நீ வேலை பார்த்துட்டு இருக்க, இந்த லட்சணத்தில் உனக்கு சம்பளம் வேற கூட்டி கேக்குற.. ஒழுங்கா கவனமா வேலைய பார், இல்லைனா சீட்டு கிழிஞ்சிரும்...
நீதி
நிர்வாகம் கட்டம் கட்ட முடிவு பண்ணிட்டா, எந்த பருப்பும் வேகாது..
என்று பகிரப்படும் அப்பதிவு வைரலாகி வருகிறது.