ரத்த ஓட்டம், செரிமான கோளாறுக்கு பூண்டு டீ.. சூப்பர் டிப்ஸ் இதோ.!
பூண்டை நசுக்கும்போது உருவாகும் அல்லிசின் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
தேயிலை டீ வேண்டாம்:
ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் எழுந்ததும் பலரும் சூடான டீ, காபி விரும்புவார்கள். இதனை குடிக்காத பட்சத்தில், அவர்களுக்கு அன்றைய நாள் போகாது. சுறுசுறுப்பு இல்லாத வகையில் இருப்பார்கள். காபி, டீ என்பது உணர்வுடன் கலந்த விஷயமாக இருக்கிறது. ஆனால், காபி, டீயில் இருக்கும் பால், சர்க்கரை ஆகியவை உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இதையும் படிங்க: Green Banana: பச்சை வாழைப்பழம் கேட்டு வாங்கி சாப்பிடுங்க.. என்னென்ன நன்மைகள்? தெரிஞ்சிக்கோங்க..!

பூண்டு டீ நல்லது:
பால் & தேயிலை சேர்த்த டீ, காபியை தவிர்த்து சங்குப்பூ டீ, செம்பருத்தி டீ போன்ற மூலிகை தேநீரை குடிப்பது நல்லது. இதில் பூண்டு டீ உடல் உபாதைகளை சரிசெய்ய உதவும். பூண்டின் மருத்துவ குணங்கள் பல்வேறு நன்மையை வழங்கும். அல்லிசின் வேதிப்பொருள் பூண்டில் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. பூண்டை நசுக்கும்போது அல்லிசின் உருவாகும். இது இயற்கையான ஆண்டிபயாடிக் ஆகும். உடலில் இருக்கும் கேடான பாக்டீரியாக்களை அழிக்கும். வைரஸை அழிக்கும்.

வாயுத்தொல்லை, உடல் கோளாறுகளுக்கு சிறந்தது:
பூண்டு டீ குடித்து வர ரத்தரத்தில் இருக்கும் கேடான கொலஸ்ட்ரால் குறையும். ரத்தக்குழாயில் இருக்கும் அடைப்புகளை நீக்கி, ரத்த ஓட்டம் சரியாகும். உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். மாரடைப்பு உட்பட இதய நோய்கள் தடுக்கப்படும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் அடிக்கடி ஏற்பட்டால், பூண்டு டீ சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும். மழை காலம் மட்டுமல்லாது எப்போதும் சுழற்சி முறையில் பூண்டு டீ சாப்பிடுவது நல்லது. மழைக்காலத்தில் பூண்டு டீ சளிக்கு நல்லது. செரிமான கோளாறு, வாயுத்தொல்லை, வயிறு உப்பிசம் சார்ந்த பிரச்சனைகளும் நீங்கும்.