2019 இல் கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய முக்கியமான நாட்கள்!

2019 இல் கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய முக்கியமான நாட்கள்!



2019 important dates should be remember

இன்னும் சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்க உள்ளது. உலகமே புத்தாண்டை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்நிலையில் புத்தாண்டு பிறந்ததும் வரும் ஆண்டில் நாம் கட்டாயம் செய்யவேண்டிய சில முக்கியமான விஷயங்கள் வரிசையாக உள்ளது. அது என்னெல்லாம் என்று பார்க்கலாம் வாங்க.

1 . டெபிட் / கிரெடிட் கார்டுகள் செல்லாது
2018 டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு மேக்னட்டிக் டெபிட் / கிரெடிட் கார்டுகள் செல்லாது. எனவே வாடிக்கையாளர்கள் உடனே சிப் பொருத்திய கார்டுகளை அருகில் உள்ள உங்கள் வங்கி கிளைக்கு சென்று உடனே பெற்றுக்கொள்ளுங்கள்.

2 . ஆதார் - பாண் கார்ட் இணைப்பு
மத்திய நேரடி வரி ஆணையம் அடுத்த வருடம் மார்ச்  31-ம் தேதிக்குள் ஆதார் கார்ட் மற்றும் பாண் கார்ட் இரண்டையும் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. நீதிமன்றம் பாண் இணைப்பு தேவை இல்லை என்ற அறிவித்தபோதும் ஆதார்- பாண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2019

3 . 2017-2018 வருமான வரி தாக்கல்
2017 - 2018 ஆம் ஆண்டிற்கான வரி செலுத்தும் தேதி ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், ஒருவேளை இன்னும் வரி செலுத்தவில்லை என்றால் 2019 மார்ச் 31 குல் வரி செலுத்த வேண்டும்.

4 . 2018-2019 வருமான வரி தாக்கல்
2018-2019 நிதி ஆண்டிற்கான வருமான வரி செலுத்த கடைசி தேதி 2019 ஜூலை 31 . வரி செலுத்த வேண்டியவர்கள் அதற்குள் தயாராகிக்கொள்ளுங்கள்.

2019

5 . டீவி கட்டண சேனல்கள்
TRAI அமைப்பு கொண்டுவந்துள்ள புதிய நடவடிக்கையின் மூலம் இனி நீங்கள் விரும்பி பார்க்கும் டீவி சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். இந்த சேவை வரும் பிப்ரவரி முதல் அமலுக்கு வர இருக்கிறது. எனவே அதற்கு முன்னதாகவே உங்கள் விருப்ப சேனல்களை தேர்வு செய்து வைத்துக்கொள்ளுங்கள்.