இந்தியா

கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்ட சொமாட்டோ டெலிவரி பாய்.. குவியும் ஆதரவு.. வைரலாகும் வீடியோ..

Summary:

சொமாட்டோஊழியர் தன்னை தாக்கியதாக இளம் பெண் கூறிய புகாரை அடுத்து அந்த ஊழியர் தற்போது வீடியோ

சொமாட்டோஊழியர் தன்னை தாக்கியதாக இளம் பெண் கூறிய புகாரை அடுத்து அந்த ஊழியர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுவரும் சம்பவங்களில் ஒன்று சொமாட்டோ ஊழியர் தனது மூக்கை உடைத்துவிட்டதாக இளம் பெண் ஒருவர் கூறிய புகார். அந்த பெண் கூறிய புகாரில், "தான் சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்ததாகவும், அந்த உணவு தாமதமாக வந்ததது குறித்து டெலிவரி பாய் காமராஜிடம் கேட்டபோது, அவர் தனது மூக்கை உடைத்துவிட்டதாகவும்" புகார் கூறினார்.

ஆனால் அந்த பெண் உணவிற்கான காசை கொடுக்க மறுத்ததாகவும், காசு கொடுங்கள் அல்லது உணவை திருப்பி கொடுங்கள் என கேட்டபோது அந்த பெண்ணை தன்னை செருப்பால் அடித்ததாகவும், அதனை தான் தடுக்க முயன்றபோது, அந்த பெண்ணின் கையில் இருந்த மோதிரம் அவரது மூக்கில் பட்டே அவரது மூக்கில் இரத்தம் வந்ததாகவும் டெலிவரி பாய் காமராஜ் விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை நடைபெற்று என்ன நடந்தது என்பது கண்டுபிடிக்கப்படும் எனவும் சொமாட்டோ நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் புகார் கொடுத்த பெண்ணிற்கு எதிராகவும், டெலிவரி பாய் காமராஜுக்கு ஆதரவாகவும் டிவிட்டர் தளத்தில் #JusticeForKamaraj #MenToo போன்ற ஹஸ்ட்டாக்குகள் ட்ரெண்டாகிவருகிறது. பிரபல ஹிந்தி நடிகை பரினீதி சோப்ராவும் டெலிவரி பாய் காமராஜுக்கு ஆதவராக ட்விட் செய்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண் கொடுத்துள்ள தவறான புகாரால் தனது வேலை போய்விட்டதாகவும், பல ஆண்டுகளுக்கு முன்பே தனது தந்தை இறந்துவிட்ட நிலையில், தனி ஆளாக சம்பாதித்து தனது குடும்பத்தையும், சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தனது அம்மாவையும் காப்பாற்றி வருவதாகவும், அமைதியான வாழ்க்கை வாழவே தான் ஆசை படுவதாகவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சொமாட்டோ டெலிவரி பாய் காமராஜ். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement