3 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் மலை இடுக்கில் சிக்கி தவித்த இளைஞர்.! விரைந்து வந்த ராணுவத்தினர்.! திக் திக் வீடியோ
3 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் மலை இடுக்கில் சிக்கி தவித்த இளைஞர்.! விரைந்து வந்த ராணுவத்தினர்.! திக் திக் வீடியோ

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு. 28 வயது நிரம்பிய இவர் நேற்று முன்தினம் 3 நண்பர்களுடன் மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றனர். இதனையடுத்து அவர்கள் நேற்று மலையில் இருந்து கீழே இறங்கியுள்ளனர். அப்போது பாபு மலையில் இருந்து கீழே இறங்கியபோது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்துள்ளார்.
பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்த பாபுவை அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதனையடுத்து அவர்கள் மலையில் இருந்து கீழே இறங்கி மலம்புழை வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று பாபுவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பாபு சிக்கியுள்ள இடத்தை அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை.
இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடங்கியது. நீண்ட நேரத்திற்கு பிறகு பாபு சிக்கியுள்ள இடம் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து மலை இடுக்கில் சிக்கிய பாபுவை ஹெலிகாப்டர் மூலம் கடற்படையினர் மீட்க முயற்சித்தும் முடியவில்லை.
Watch: #Babu, the youth trapped in a steep gorge in #Malampuzha mountains in Palakkad, #Kerala has now been rescued.
— TOI Kochi (@TOIKochiNews) February 9, 2022
Teams of the Indian Army had undertaken the rescue operation. pic.twitter.com/JSq2Rvkg5w
இதனையடுத்து இந்திய ராணுவத்திடம் இளைஞரை மீட்க கேரள அரசு கோரிக்கை வைத்தது. இதனையடுத்து ராணுவ வீரர்கள் மூன்று நாட்களாக மலை இடுக்கில் சிக்கி தவித்த பாபுவை இந்திய ராணுவ வீரர்கள் கயிறு மூலம் மீட்டனர். 48 மணி நேரத்திற்கு மேலாக மலை இடுக்கில் சிக்கிய அவருக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டது.