இந்தியா

கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சட்னி , சமோசா கேட்ட வாலிபர்! சமோசாவுடன் சேர்த்து அருமையான வேலை கொடுத்த நீதிபதி!

Summary:

Youngster ask samosa

கொரோனா வைரஸ் நாடுமுழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சில அரசு, தனியார் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு விடுமுறையும், சில நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் வீடுகளில் இருந்து பணி பணியை தொடர்ந்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாட்டின் அணைத்து மாவட்டங்களிலும்
கொரொனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. யாருக்கேனும் கொரோனா குறித்த அறிகுறிகள் இருந்தால் கொரொனா கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் கொடுத்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் உத்தரபிரதேச மாநில ராம்பூர் மாவட்ட கொரொனா கட்டுப்பாட்டு கட்டுப்பாட்டு அறைக்கு இளைஞர் ஒருவர் போன் செய்து தனக்கு, சட்னியுடன் சமோசா வேண்டும் என்று கேட்டுள்ளார். கட்டுப்பாட்டு அறையில் போன் எடுத்தவர்கள், இது கொரோனா கட்டுப்பட்டு அறை இங்கு கோரோனோ குறித்த கேள்விகளுக்கும், தகவல்களுக்கும் உடனடி பதிலும், உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனாலும் அந்த நபர் மீண்டும் மீண்டும் போன் செய்து கட்டுப்பாட்டு அறைக்கு தொல்லை கொடுத்துள்ளார். கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்களும் பலமுறை எச்சரித்துள்ளனர்.

ஒருகட்டத்தில், அந்த இளைஞர் விரும்பியவாறே 4 சமோசாக்களை சட்னியுடன் அனுப்புமாறு நீதிபதி ஆஜநேயகுமார் உத்தரவு பிறப்பித்தார். மேலும், அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக, சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும் என்ற தண்டனையும், நீதிபதி வழங்கி உத்தரவிட்டார். பின்னர் நீதிபதியின் உத்தரவுப்படி, அவர் சாக்கடையை சுத்தம் செய்தார்.


Advertisement