ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளும் தனுஷின் 'கேப்டன் மில்லர்'.!
ஒத்த செல்ஃபியால் உயிர் பிழைத்துக்கொண்ட வாலிபர்.! வெளியான ஆச்சர்ய சம்பவம்!!
ஒத்த செல்ஃபியால் உயிர் பிழைத்துக்கொண்ட வாலிபர்.! வெளியான ஆச்சர்ய சம்பவம்!!

தற்காலத்தில் செல்பி என்பது மக்களிடையே பெரும் நாகரிகமாக வளர்ந்து வருகிறது. மேலும் அனைத்து வயதினரும் செல்லும் இடங்களிலெல்லாம் செல்பி எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் கவனக்குறைவு ஏற்பட்டு ஏராளமான உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் செல்பி ஒன்றால் இளைஞர் ஒருவர் உயிர் தப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவரது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்த அந்த வாலிபர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சங்கனாச்சேரி ரயில்வே கேட் அருகே சென்று தண்டவாளத்தில் படுத்து கொண்டுள்ளார்.
மேலும் அப்போது செல்பி எடுத்த அவர், அதனை தனது நண்பர்களுக்கு நான் வாழ்ந்தது போதும், வாழவே வெறுப்பாக உள்ளது. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் புகைப்படத்தில் உள்ள மைல்கல்லை அடையாளம் கண்டுகொண்டு அங்கு விரைந்துள்ளனர். மேலும் அவர்கள் ரயில்வேக்கு தகவல் தெரிவித்தநிலையில் அவர்கள் ஓடி சென்று தண்டவாளத்தில் படுத்து கொண்டிருந்த இளைஞரிடம் சமாதானம் பேசி அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அவருக்கு அறிவுரையும் வழங்கியுள்ளனர்.