பரிதவித்து நின்ற 32 காஷ்மீர் சிறுமிகள்! ஹீரோவாக மாறி உதவி செய்த சாப்ட்வார் இன்ஜினியர்!

பரிதவித்து நின்ற 32 காஷ்மீர் சிறுமிகள்! ஹீரோவாக மாறி உதவி செய்த சாப்ட்வார் இன்ஜினியர்!



young man helping to kashmir girls

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை அடுத்து, பாதுகாப்பு காரணமாக உள்ளூர் மக்களிடையே அனைத்துவிதமான தகவல்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது. இணையம், தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி இணைப்புகளை துண்டித்து, மாநிலத்திற்கு வெளியே யாரையும்  தொடர்பு கொள்ள முடியாத வகையில் இராணுவம் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதனால் வெளிமாநிலங்களில் தங்கி படிக்கும் காஷ்மீர் சிறுமிகள் பலரும் தங்களுடைய குடும்பத்தினர் குறித்து பெரும் கவலையில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி டெல்லியைச் சேர்ந்த ஒரு சாப்ட்வார் இன்ஜினியர் ஹர்மிந்தர் சிங் என்பவர் பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்தார். அதில், பாதுகாப்பற்றதாக உணரும் மாநிலத்திற்கு வெளியே உள்ள அனைத்து காஷ்மீரை சேர்ந்தவர்களும்  என்னை தொடர்பு கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.

இதனை பார்த்த பெண் ஹர்மிந்தர் சிங்கை தொடர்பு கொண்டு, காஷ்மீர் குடும்பங்களைச் சேர்ந்த 32 காஷ்மீர் சிறுமிகள், வீடு திரும்புவதற்காகக் காத்திருக்கிறார்கள் என உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து அவர்கள் ஸ்ரீநகரை அடைந்த பின்னர் ராணுவத்தின் உதவியுடன் சிறுமிகள் அவர்களுடைய குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தனர்.