இந்தியா

சாக்கு மூட்டைக்குள் சடலமாக கிடந்த இளம்பெண்! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

young girl murder

இளம்பெண் ஒருவர் கர்நாடகாவில் சாக்குமூட்டையில் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலத்தின் மங்களூர் நகரில் இரு தினங்களுக்கு முன்னர் வெவ்வேறு இடங்களில் சாக்குமூட்டைகளில் பெண்ணின் உடல் துண்டுதுண்டாக மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஸ்ரீமதி என தெரியவந்தது.

இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்ட போலீசார் தற்போது ஸ்ரீமதியின் இருசக்கர வாகனத்தை கைப்பற்றியுள்ளனர். அந்த வாகனம் முழுவதும் ரத்தகறை இருந்ததாக காவல்துறை கூறியுள்ளனர்.

ஸ்ரீமதி இரண்டு வருடங்களுக்கு முன்னர் சுதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்னர் சுதீப்பின் நடத்தை பிடிக்காமல் அவரிடம் ஸ்ரீமதி விவாகரத்து கேட்டுள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 


Advertisement