இந்தியா

நுழைவாயிலில் இருந்த கண்ணாடி! வெற்றிடம் என நினைத்து வேகமாக மோதிய இளம்பெண் பரிதாப பலி! வெளியான பகீர் வீடியோ!

Summary:

young girl died for glasses door

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கண்ணாடியை கவனிக்காமல் கதவில் மோதிய இளம் பெண், ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் எர்ணாகுளத்தின் பெரம்பவூரில் உள்ள வங்கிக்குச் சென்றுள்ளார் பீனா என்ற பெண். அவர் வங்கிக்கு உள்ளே சென்ற சிறிது நேரத்தில், தாம் பைக் சாவியை இரு சக்கர வாகனத்திலே மறந்து வைத்துவிட்டோம் என்பதை அறிந்து, சாவியை எடுக்க வேகமாக வெளியே சென்றார். 

அப்போது வங்கியின் வாசலில் கண்ணாடி கதவு இருப்பது தெரியாமல், வெற்றிடம் என நினைத்து, வேகமாக கடந்த போது, கண்ணாடியில் மோதி அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

உடைந்த கண்ணாடி அவரது தலை மற்றும் அடிவயிற்றை குத்திக் கிழித்துள்ளது. உடனடியாக வங்கியில் இருந்தவர்கள் பீனாவை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால் அதிக ரத்தம் வெளியானதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
 


Advertisement