கொஞ்சமும் தயங்காம பஸ்சுக்குள்ளே இந்த இளம் பெண் செய்த காரியத்தை பார்த்தீங்களா!! வைரலாகும் வீடியோ!!

டெல்லி நகர அரசு பேருந்து ஒன்றில் சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் எறியுள்ளார். அவர் எந்த பகுதியிலும் இறங்காமல், பேருந்து டிப்போவிற்கு செல்லும்வரை பஸ்ஸிலேயே பயணித்துள்ளா,ர் அதுமட்டுமின்றி திடீரென பஸ்சின் உள்ளே நடனமாட தொடங்கியுள்ளார். இந்நிலையில் பஸ் டிப்போ சென்றபோது அவர் நடனமாடிக் கொண்டே கீழே இறங்கி உள்ளார் பின்னர் கீழே இறங்கியும் அவர் குத்தாட்டம் போட்டுள்ளார்
இந்நிலையில் இதனை கண்டிக்காமல் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் மார்ஷல் ஆகியோர் அவரது நடனத்தை கண்ணிமைக்காமல் வேடிக்கை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பேருந்தின் உள்ளேஇளம்பெண் ஒருவர் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பேருந்தின் ஓட்டுனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் நடத்துனருக்கு இதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அரசு பேருந்தை , அவசியம் இல்லாத, அங்கீகரிக்கப்படாத ஒரு செயலுக்கு அனுமதித்தது மற்றும் அவரை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்தது போக்குவரத்துக் கழகத்தின் கண்ணியத்தைக் கெடுத்துள்ளது என அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் மார்ஷல் பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டார்.