#Breaking: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு செயல்பாடுகளை நிறுத்த மத்திய அரசு அதிரடி உத்தரவு.! பாலியல் தொல்லை புகாரால் நடவடிக்கை.!

#Breaking: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு செயல்பாடுகளை நிறுத்த மத்திய அரசு அதிரடி உத்தரவு.! பாலியல் தொல்லை புகாரால் நடவடிக்கை.!



wrestler-federation-of-india-works-stopped-now-by-centr

 

குத்துசண்டை வீரர்கள் தேர்வு குழுவில் உள்ள பெண்களுக்கு நிர்வாகத்தினர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்து டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் நேரடியாக களத்திற்கு சென்று பெண்களுக்காக குரல் கொடுத்தார். 

முதற்கட்ட களநிலவரப்படி இந்திய மல்யுத்த வீரர்கள் அமைப்பில் உள்ள தேர்வுநிலைக்குழு அதிகாரிகள், இளம் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக அணுக முயற்சித்து தொல்லை கொடுத்தது அம்பலமானது. மேலும், அவர்களின் ஆசைக்கு இணங்காத பெண்களை மனரீதியாக துன்புறுத்தியுள்ளனர். 

Wrestler Federation of India

இந்த விவகாரம் ஊடகங்களில் செய்தியாக வெளியாகி வைரலானதை தொடர்ந்து, மத்திய அரசு Wrestler Federation of India அமைப்பின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. நடப்பில் தரவரிசை போட்டியும் இடைநிறுத்தப்பட்டு, அதற்காக பெறப்பட்ட நுழைவு கட்டணத்தை திரும்பி வழங்கவும் ஆணையிட்டுள்ளது. 

அதனைப்போல WFI அமைப்பை கண்காணித்து நிர்வகிக்கும் பணியை மேற்கொண்டு வந்த WFI உதவி செயலர் வினோத் தோமரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. பலரின் போராட்டத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றியாக இது பார்க்கப்பட்டாலும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.