இந்தியா உலகம்

கொரோனோவில் இருந்து வெளிய வாங்க..! இந்தியாவுக்கு தோள்கொடுத்த உலக வங்கி..! அவசரகால நிதி அறிவிப்பு.!

Summary:

World bank gives 1 billion USD dollars to India

கொரோனாவின் கோர பிடியில் இருந்து இந்தியாவை காப்பாற்ற 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவிற்கு நிதியாக கொடுத்துள்ளது உலக வங்கி.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து 2500 ஐ தாண்டியுள்ளது. 72 பேர் கொரோனோவால் இந்தியாவில் உயிர் இழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு 1 பில்லியன் டாலர்கள் தொகையை அவசரகால நிதியாக வழங்குவதாக  உலக வங்கி அறிவித்துள்ளது. இந்த நிதி மூலம் புதிய மருத்துவப் பரிசோதனை நிலையங்கள், தனிப்பட்ட பாதுகாப்புக் கவசங்கள், புதிய தனிமைப்பிரிவு வார்டுகள் ஆகியவற்றை உருவாக்கலாம் என உலக வங்கி கூறியுள்ளது.

இந்தியாவை போல் பாகிஸ்தானுக்கு 200மில்லியன் டாலர்கள், ஆப்கானிஸ்தானுக்கு 100 மில்லியன் டாலர்கள், மாலத்தீவுகளுக்கு 7.3 மில்லியன் டாலர்கள் மற்றும் இலங்கைக்கு 128.6 மில்லியன் டாலர்களை உலக வங்கி நிதியாக வழங்க உள்ளது.


Advertisement