இந்தியா காதல் – உறவுகள்

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத கணவன்.! ஆத்திரத்தில் குழந்தையோடு மனைவிக்கு நேர்ந்த விபரீதம்!!

Summary:

womwn commit suicide with her child

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வருபவர் பங்கஜ். இவரது மனைவி ஜோதி.28 வயது நிறைந்த இவர் மாடலாக உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷபுனா என்ற 7 வயது மகள் உள்ளார். இந்நிலையில் ஜோதி மாடலிங் செய்து வருவது பங்கஜ்க்கு பிடிக்கவில்லை. மேலும் ஜோதியின் நடத்தை மீது சந்தேகம் அடைந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பும்  பங்கஜ் மற்றும் ஜோதி சண்டை போட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பங்கஜ்  வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

தொடர்புடைய படம்

ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. மேலும் மறுநாளும் வீடு திரும்பாததால் ஜோதி அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. மேலும் சிறு நேரங்களுக்குப் பிறகு போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. 

இதனால் ஆத்திரம் மற்றும் மனவிரக்தி அடைந்த ஜோதி தன் வசித்துவந்த 20 மாடி கொண்ட அப்பார்ட்மெண்டின் மொட்டை மாடியிலிருந்து குழந்தையோடு குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பார்ட்மெண்ட் காவலாளி போலீசாருக்கு தகவல் தெரிவித்த விலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement