ரயிலின் மேல் படுக்கையில் இருந்து கீழே விழுந்த பெண் மரணம்!

ரயிலின் மேல் படுக்கையில் இருந்து கீழே விழுந்த பெண் மரணம்!


women fall down from train upper birth


மும்பையில் இருந்து பெங்களூருக்கு சென்ற உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 40 வயது நிரம்பிய சரஸ்வதி என்ற பெண் பயணித்துள்ளார். இவர் ரயிலின் ஏசி கோச்சில் டிக்கெட் புக் செய்து மேல் படுக்கையில்(upper birth)படுத்துள்ளார். வண்டி பெங்களூருவை நெருங்கியதும் மேல் படுக்கையில் இருந்து இறங்க அவர் முயற்சித்துள்ளார்.

மேல்படுகையில் இருந்து கீழே இறங்கியபோது கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் அவருக்கு பலமாக அடிபட்டது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து ரயில்வே துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

train

இதனையடுத்து ரயில் நிலையத்தில் மருத்துவர்கள் தயாராக இருந்துள்ளனர். ரயில் வந்தவுடன் சரஸ்வதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மயங்கி சுயநினைவை இழந்து உயிரிழந்துள்ளார் சரஸ்வதி. 

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ரயில் வந்ததும் சரஸ்வதிக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு தெளிவாக சரஸ்வதி பதில் அளித்தார். சரஸ்வதி தனது உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்லும் அளவுக்கு தெளிவாகத்தான் பேசினார். ஆனால் தலையில் உள்காயம் பலமாக இருந்ததால் உயிரிழந்தார்' என கூறியுள்ளனர்.