உயிருடன் புதைக்கப்பட்டிருந்த பெண்! நீர்பாசனத்திட்டத்திற்காக பள்ளம் தோண்டிய தொழிலாளர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
உயிருடன் புதைக்கப்பட்டிருந்த பெண்! நீர்பாசனத்திட்டத்திற்காக பள்ளம் தோண்டிய தொழிலாளர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

கோவா மாநிலத்தை சேர்ந்த துக்காராம் என்பவரின் மனைவி நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.இந்தநிலையில் கூலித்தொழிலில் செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து மனைவியின் சிகிச்சையையும், தனது மகனின் படிப்பு செலவையும் கவனித்து வந்துள்ளார் துக்காராம்.
ஆனால் தினமும் உடல்நலக்குறைவுடன் போராடும் மனைவிக்கு போதிய சிகிச்சையளிக்க பணமில்லாத காரணத்தால், அவரை கொலை செய்ய துக்காராம் முடிவு செய்துள்ளார். இதற்காக தன்னுடைய மனைவியை பக்கத்து கிராமத்திற்கு அழைத்து சென்று, ஒரு கால்வாய் அருகே உயிருடன் புதைத்துவிட்டு, அந்த இடத்திலேயே உட்கார்ந்திருந்துள்ளார்.
அந்த சமயத்தில் நீர்பாசனத்திட்டத்திற்காக அங்கு வந்த தொழிலாளர்கள் சிலர் குழிதோண்டும் பணியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த துக்காராம், பள்ளம் தோண்ட வேண்டாம் என அவர்களிடம் கெஞ்சியுள்ளார்.
ஆனால் அதனை பொருட்படுத்தாமல், குழிதோண்டும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளது. அப்போது பெண் ஒருவரின் சடலம் தட்டுப்படுவதை பார்த்த தொழிலாளிகள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், புதைக்கப்பட்டிருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து அவருடைய கணவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, வறுமையின் காரணமாகவே மனைவியை உயிருடன் புதைத்ததாக கூறியுள்ளார். இந்த நிலையில் துக்காராம் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.