இந்தியா

நாடே பேரதிர்ச்சி.. ஒன்றல்ல., இரண்டல்ல.. 36 பெண்களிடம்.. வெளிவந்த பரபரப்பு தகவல்..!

Summary:

நாடே பேரதிர்ச்சி.. ஒன்றல்ல., இரண்டல்ல.. 36 பெண்களிடம்.. வெளிவந்த பரபரப்பு தகவல்..!

36 பெண்களுக்கு திருமண ஆசை காட்டி ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் சுருட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் இணையத்தின் மூலமாக திருமண பதிவு மையத்தில் பல பெயர்களில் மோசடி பேர்வழி ஃபர்ஹான் என்ற ஒருவர் ஏமாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், ஒரு பெண்ணிடம் 15 லட்சம் ரூபாய் பெற்று திருமணம் செய்யாமல் ஏமாற்றியதை தொடர்ந்து, அவர் மீது பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஃபர்ஹானை விசாரித்த நிலையில், இவர் இதேபோன்று 36 பெண்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. அத்துடன் பலரிடம் பணம் வாங்கியிருப்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

அத்துடன் இணையத்தில் வரும் திருமணப் பதிவு மையத்தில் அனைத்தும் உண்மையாக உள்ளதா? என ஆராய்ந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும், ஆராயாமல் யார் கேட்டாலும் பணம் கொடுத்தால் நிலைமை மிகவும் மோசமாகி விடும் எனவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.


Advertisement