புல்லரிக்கவைக்கும் வீடியோ காட்சி.. விபத்தில் இருந்து நொடிப் பொழுதில் காப்பாற்றப்பட்ட சிறுமி..

புல்லரிக்கவைக்கும் வீடியோ காட்சி.. விபத்தில் இருந்து நொடிப் பொழுதில் காப்பாற்றப்பட்ட சிறுமி..


Women and man save a kid from car accident viral video

பெரிய விபத்து ஒன்றில் இருந்து சிறுமி ஒருவரை இளைஞர் காப்பாற்றும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

சாலையை கடப்பதற்காக பெண் ஒருவர் சாலை ஓரமாக நின்றுகொண்டிருக்கிறார். அவருக்கு அருகில் ஒரு இளைஞரும் நின்றுகொண்டிருக்கிறார். அதேநேரம், சாலையை கடப்பதற்காக மறுபுறம் சிறுமி ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார். இதற்கு இடையில் பரபரப்பான சாலையில் வாகங்கனால் சீறிப்பாய்ந்த வண்ணம் உள்ளது.

ஒருகட்டத்தில் எதிர் திசையில் நின்றுகொண்டிருந்த சிறுமி, வாகனம் வருவதை கவனிக்காமல் வேகமாக சாலையில் ஓடிவந்தவாறு சாலையை கடக்க முயல்கிறார். இந்நிலையில் சிறுமி ஓடி வருவதையும், சாலையில் கார் ஒன்று வேகமாக வந்துகொண்டிருப்பதையும் பார்த்த எதிர் திசையில் நின்றுகொண்டிருந்த பெண், தனது அருகில் நின்றுகொண்டிருந்த இளைஞரின் கையை தட்டி அந்த குழந்தையை காப்பாற்றும்படி எச்சரிக்கிறார்.

உடனே அதனை புரிந்துகொண்டு அந்த இளைஞரும் வேகமாக ஓடி, அந்த சிறுமியை சாலையில் இருந்து தூக்கிக்கொண்டு நகர்கிறார். இதற்கிடையில் வேகமாக வந்த கார் நூலிழையில் அவர்கள் மீது மோதாமல் நிற்கிறது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி வீடியோ கேமிராவில் பதிவாகி இருந்தநிலையில் தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கண் இமைக்காமல் காணவைத்து வைரலாகி வருகின்றது.

மேலும் சாதுர்யமாக செயல்பட்டு பெரும் விபத்தில் இருந்து அந்த சிறுமியை காப்பாற்றிய அந்த பெண்ணிற்கும், அந்த இளைஞருக்கும் பலரும் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.