ரயிலில் உறங்கியபடி கேரளா சென்ற மதுரை பாட்டி மொழி பிரச்னையில் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்..! போராடி மீட்ட மகள்.!

ரயிலில் உறங்கியபடி கேரளா சென்ற மதுரை பாட்டி மொழி பிரச்னையில் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்..! போராடி மீட்ட மகள்.!


women-admitted-in-mental-hospital-who-slept-at-train

ரயிலில் உறங்கியபடி கேரளா சென்ற பாட்டி ஒருவர் மொழிப்பிரச்னையால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என நினைத்து மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பொண்ணகரம் பகுத்தியை சேர்ந்தவர் 70 வயதான கஸ்த்தூரி பாட்டி. இவர் கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு ரயிலில் சென்றுள்ளார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பாட்டி மதுரையில் இறங்காமல் தூங்கிவிட்டநிலையில் ரயில் அடுத்தாக கேரளா சென்றுள்ளது.

இதனால் கேரளாவில் இறங்கிய கஸ்த்தூரி பாட்டி அங்கிருத்தவர்களிடம் தனது நிலையை எடுத்துக்கூற முற்பட்டுள்ளார், ஆனால் அங்கிருந்தவர்களுக்கு மொழி தெரியாததாலும், வயதான பாட்டி என்பதாலும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என நினைத்து அங்கிருந்த மனநல காப்பகம் ஒன்றில் சேர்த்துவிட்டனர்.

இதனிடையே ஊரடங்கு உத்தரவு வேறு பிறப்பிக்கப்பட்டதால் சூழ்நிலை மேலும் மோசமானது. இதனிடையே தனது தாயை காணவில்லை என கடந்த 80 நாட்களாக தேடி அலைந்த பாட்டியின் மகள் ஒருவழியாக தனது தாய் கேரளாவில் உள்ள மனநல காப்பகம் ஒன்றில் இருப்பதை கண்டறிந்துள்ளார்.

Mysterious

ஆனால் எவ்வளவு முயன்றும் அவரால் தனது தாய்யை அங்கிருந்து மீட்கமுடியவில்லை. இதனை அடுத்து தனது தாய்யை மீட்டுத்தருமாறு அந்த பெண் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அவர்களிடம் கண்ணீர்மல்க மனு ஒன்றை கொடுத்துள்ளார். சூழ்நிலையை புரிந்துகொண்ட ஆட்சியர் வினய்  உடனே கோழிக்கோடு மாவட்ட ஆட்சியருக்கு போன் செய்து பாட்டியை தமிழ்நாட்டிற்கு அனுப்பு உதவுமாறு கேட்டுள்ளார்.

இதனை அடுத்து கோழிக்கோடு மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் பாட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் வினையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மொழி தெரியாத ஒரே காரணத்தால் நல்ல மனநிலையுடன் உள்ள ஒருவர் கடந்த 80 நாட்களாக மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.