இச்சைக்காக 3 வயது மகள் படுகொலை.!! தாய், கள்ளக்காதலன் கைது.!!



woman-murdered-her-daughter-for-illicit-relationship

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் சேர்ந்து கொன்று புதைத்துள்ளனர். திருமலையில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கர்(33). இவரது மனைவி மம்தா(26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.மகன் சரண் (4), மகள் (3). இந்த தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மம்தா குழந்தைகளுடன் தனது அம்மா வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.

India

இதனையடுத்து அதே ஊரில் உள்ள பயாஸ் என்ற வாலிபருடன் மம்தாவிற்கு கள்ள தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு கள்ளக்காதலனுடன் தனிமையில் இருக்க தனது மகனை தாய் வீட்டில் விட்டுவிட்டு மகள் தனுவை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

இதையும் படிங்க: "மாமியார் வீட்டில் உல்லாசம்..." மகள், காதலனை தீர்த்து கட்டிய தந்தை.!!

இந்நிலையில் ‌உல்லாசத்திற்கு இடையூறாக இருந்தததாக கூறி 3 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். இதற்கடுத்து கடந்த 27 ஆம் தேதி கணவர் பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்த போலீசார் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெற்ற பிள்ளையை தன் இச்சைக்காக தாய் கொன்றது வேதனையை அளிக்கிறது.

இதையும் படிங்க: "காதல் பண்ண விட மாட்டியா..." கணவன் குத்தி படுகொலை.!! மனைவி கள்ளக்காதலன் கைது.!!