"இனி அதிக கமிஷனுக்கு நோ.!" Swiggy,Zomato டெலிவரி நிறுவனங்களுக்கு ஹோட்டல் சங்கம் விடுத்த எச்சரிக்கை.! 



Bengaluru Hotel Association Warns Food Delivery Companies

பெங்களூருவில் செயல்பட்டு வரும் உணவகங்களின் உரிமையாளர்கள் சங்கம், Swiggy,zomato போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உணவகங்களின் நலனை பாதிக்கும் வகையிலான நடைமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அதிக கமிஷன் வசூல், கட்டாய தள்ளுபடி சலுகைகள் மற்றும் உணவகங்களுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தும் வர்த்தக நடைமுறைகள் குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

food delivery

இதுகுறித்து சம்பந்தப்பட்ட Swiggy,zomato டெலிவரி நிறுவனங்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் ஹோட்டல் சங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: BREAKING: ஷாக் நியூஷ்! சென்னையில் LPG சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம்! பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிப்பு!!!

உணவகங்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்களுக்கு இடையேயான இந்த மோதல், பெங்களூருவின் உணவுத் துறை வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: முன்னறிவிப்பு இன்றி இரவோடு இரவாக 1000 பேர் பணி நீக்கம்..! ஷாக்கில் தவெக அமைச்சர்... தமிழகத்தில் பரபரப்பு...!